இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.
திருவனந்தபுரம் | பிப்ரவரி 12.
ஆளுங்கட்சியை எதிர்த்து, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உயர்த்தக் கோரியும், வேலை வாய்ப்பு மூலம் நியமனம் செய்யப்படவில்லை என்றும், அரசு வேலை வாய்ப்புகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று கேரளா மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக,
பேருந்துகள் இயங்கவில்லை
அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படவில்லை
தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தமிழ்நாடு டுடே செய்தியாளர்: V. J. ஷாலு, கேரளா, திருவனந்தபுரம்

