விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்களின் தலைமையில், இன்று விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது.
மதுவிலக்கு வழக்குகள் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட
நான்கு சக்கர வாகனங்கள் – 10
மூன்று சக்கர வாகனங்கள் – 4
இரு சக்கர வாகனங்கள் – 99
என மொத்தம் 113 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இதில் ஏலம் எடுக்கப்பட்ட வாகனங்களின் மூலம் கிடைத்த ரூ.23,32,200 (ரூபாய் இருபத்தி மூன்று லட்சத்து முப்பத்தி இரண்டு ஆயிரத்து இருநூறு) தொகை அரசு கருவூல கணக்கில் சேர்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்
கே. மாரி

