போடிநாயக்கனூர்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக இந்த புதிய மையத்தை ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்வுகள்.
போடியில் நடைபெற்ற நிகழ்வில், நகராட்சித் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், நகராட்சி ஆணையாளர் சுதா மற்றும் தலைமை பொறியாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், 20-வது பகுதி நகர்மன்ற உறுப்பினரும் தேனி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளருமான மகேஸ்வரன், 27-வது வார்டு கவுன்சிலர் லதா சக்தி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நகராட்சி கழிவு மேலாண்மைக்கு புதிய தளம்.
இந்த புதிய உயிரி எரிவாயு ஆலை மூலம், நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மேம்படுவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி தொகுப்பு:
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

