திருவண்ணாமலை மாவட்டம் | செங்கம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இந்த முறைகேடுகள், வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), மேற்பார்வையாளர்கள் மற்றும் கணினி இயக்குனர் ஆகியோரின் உடந்தையுடன் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பண்ணைக்குட்டை பணிகளில் முறைகேடு:
ஆண்டிப்பட்டி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட 8 பண்ணைக்குட்டை பணிகளில்,
உண்மையில் முறையாக பண்ணைக்குட்டை வெட்டப்படாத நிலையிலும், ரூ.15,76,000 செலவிடப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடவு பணிகளில் பெரும் ஊழல்:
அதேபோல், தனிநபர் நிலங்களில் மரக்கன்று நடும் பணிகளுக்காக ஒருவருக்கு ரூ.3,99,000 வீதம்,
மூன்று நபர்களின் நிலங்களில் மொத்தம் ரூ.11,97,000 செலவிடப்பட்டதாக பதிவுகள் இருப்பதாகவும்,
ஆனால் உண்மையில் மரக்கன்று நடவு மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஏழை மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட அரசுப் பணம்,
இவ்வாறு முறைகேடாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,
➡️ செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம்,
➡️ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
இவ்விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆண்டிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி : ஏழுமலை
திருவண்ணாமலை

