சபரிமலை | கேரளா
சபரிமலையில் நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜை மற்றும் மஹோத்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் ஆறாவது தொகுதி போலீசார் பொறுப்பேற்றுள்ளனர்.
சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில் இந்த புதிய காவல் குழு பணியில் இணைந்துள்ளது. தற்போது அவர் திருவனந்தபுரம் காவல் தலைமையகத்தின் எஸ்.பி. ஆக பணியாற்றி வருகிறார்.
இந்த குழுவில்,
11 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DYSP)
34 காவல் ஆய்வாளர்கள் (CI)
1489 சிவில் காவல் அதிகாரிகள்
உட்பட, மொத்தம் 1534 போலீசார் சபரிமலை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை
புதிய குழுவினருக்கு சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் விரிவான உத்தரவுகளை வழங்கினார்.
➡️ ஐயப்ப பக்தர்களுக்கு சுமூகமான, தடையற்ற தரிசனம் கிடைக்க வேண்டும்,
➡️ பக்தர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.
முக்கிய பாதுகாப்பு பணிப் புள்ளிகள்
சபரிமலை சுற்றுவட்டாரத்தில்,
சபரிபீடம்
மரக்கூட்டம்
சோபனம்
பத்தினெட்டாம் படி
பாப்பந்தல்
யு-டர்ன்
சரம்குத்தி
கொடிமரம்
மாளிகாபுரம்
பண்டிதவளம்
கே.எஸ்.இ.பி. பகுதி
ஆகிய இடங்கள் முக்கிய பாதுகாப்பு மையங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மகரவிளக்கு தின சிறப்பு ஏற்பாடுகள்.
ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு மஹோத்சவத்தின் போது,பெருமளவு ஐயப்ப பக்தர்கள் திரளாக வருவார்கள் என்பதால்,சிறப்பு பாதுகாப்பு மற்றும் கூட்டக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ஷாலு
தமிழ்நாடு டுடே
கேரளா – சபரிமலை