Sat. Jan 10th, 2026

திண்டுக்கல்லில் சாலை மறியல் – 500-க்கும் மேற்பட்டோர் கைது…..?

திண்டுக்கல் | ஜனவரி.

குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பராமரிப்பில் அடித்தளப் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான வாழ்வாதார உரிமை மற்றும் அரசு ஊழியர் அங்கீகாரத்தை கோரி இன்று சாலையில் அமர்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டம், தொழிலாளர் உரிமை மற்றும் சமூக நீதி குறித்த கேள்விகளை மீண்டும் மையத்துக்கு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நீண்டநாளாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

🔹 முக்கியக் கோரிக்கைகள்:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை
உடனடியாக அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்,
நிரந்தர பணிநிலை, சமூக பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

🔹 போராட்டத்தின் நடைமுறை:

முதற்கட்டமாக, திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தரையில் அமர்ந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானனர்.

🔹 காவல்துறை நடவடிக்கை:

சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடருவோம் என ஊழியர்கள் உறுதியுடன் நின்றனர்.

இதையடுத்து, நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு,
500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் பேருந்துகள் மூலம் அப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

🔹 மீண்டும் எழும் சமூக கேள்வி.

அரசின் குழந்தை நலத் திட்டங்களை தரையில் செயல்படுத்தும் அங்கன்வாடி ஊழியர்களே, அரசு ஊழியர் என்ற அங்கீகாரம் இல்லாமல் பணியாற்றி வரும் நிலை குறித்து, இந்தப் போராட்டம் மீண்டும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட தலைமை நிருபர்
(Crime Investigation Chief Reporter)
சந்திர மோகன்
தமிழ்நாடு டுடே

By TN NEWS