பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்
நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்?
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி.
ஒரே ஊரில், ஒரே தெருவில், ஐந்து நாட்களுக்கும் மேலாக உணவின்றி, வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணியை மட்டுமே கொண்டு உயிர் தாங்கி வாழ்ந்த ஒரு முதியவர் இருந்திருக்கிறார் என்றால், அது வறுமையின் தோல்வி அல்ல —
சமூகத்தின் தோல்வி.
“அருகில் இருக்கிறோம்” என்று சொல்லிக்கொள்ளும் சமூகத்தில், ஒரு முதியவர் சத்தமில்லாமல் சோர்ந்து போவது எப்படித் தெரியாமல் போனது? நலத்திட்டங்கள், உதவி எண்கள், அரசு விளம்பரங்கள் அனைத்தும் இருக்க, அவை அதிகம் தேவைப்படுபவரை ஏன் அடையவில்லை?
இந்த அவல நிலையை மாற்றியது அரசு இயந்திரம் அல்ல.
ஒரு மனிதரின் மனிதநேய மனசாட்சி.
நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா
கன்னியாகுமரி மாவட்ட இயக்குனர் திரு. J. ராஜேஷ் கமல்,
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து, கடந்த 06.01.2026 அன்று
108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்து,
அந்த முதியவரை அரசு மருத்துவமனையில் சேர்க்க முன்னின்று செயல்பட்டார்.
இந்த நடவடிக்கை,
ஒரு உயிரை காப்பாற்றியது.
அதே நேரத்தில்,
“நாம் ஏன் இதை முன்பே கவனிக்கவில்லை?”
என்ற சங்கடமான கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட சம்பவமா?
இல்லை.
நம் கிராமங்களிலும், நகரங்களிலும்,
இப்படி காணாமல் போகும் முதியவர்கள் எத்தனை பேர்?
உணவு ஒரு தானம் அல்ல.
அது அடிப்படை உரிமை.
முதியோர் பாதுகாப்பு — ஒரு கருணை செயல் அல்ல.
அது சமூகப் பொறுப்பு.
இந்த சம்பவம்,
அரசு துறைகள், உள்ளாட்சி நிர்வாகங்கள்,
தன்னார்வ அமைப்புகள்,
முக்கியமாக நாம் அனைவரும்
மீண்டும் ஒரு முறை சுயபரிசீலனை செய்ய வேண்டிய தருணம்.
ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது…?
ஆனால்…………………………………………..??
பல கேள்விகள் இன்னும் பதிலின்றி நிற்கின்றன….!
துணை ஆசிரியர் இரா. சுதாகர்
தமிழ்நாடு டுடே செய்திகள்.
