தென்காசி / ஜனவரி 7 :
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து இன்று காலை தேரைகால்புதூர் பகுதியில் உள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு நடைபெற்றது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்த உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று, காயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விபத்தின் தாக்கத்தில், இருசக்கர வாகனத்தின் சாவி போடும் பகுதி உடைந்து, அது அரசு பேருந்தில் சிக்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் விபத்தின் தீவிரம் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கையில்,
“இருசக்கர வாகனத்தில் வந்தவர் சாலையை கவனிக்காமல், அதிக வேகத்தில் வந்ததே இந்த விபத்துக்குக் காரணம்”
என்று கூறினர்.
இந்த விபத்து, அதிவேகம் மற்றும் கவனக்குறைவு எவ்வளவு பெரிய உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதற்கான இன்னொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதே இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் ஒரே வழி என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர்,
தென்காசி

