ஜனவரி 3.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்மனாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் அதிக உயரம், பொதுமக்களின் உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Railway Act – சட்டக் கோணம்:
Railways Act, 1989ன் படி,
பிரிவு 13 & 18 : ரயில்வே உட்கட்டமைப்புகள் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படுத்தாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்
பிரிவு 147 / 152 : அலட்சியம் அல்லது பாதுகாப்பு குறைபாடு காரணமாக உயிர் அல்லது உடல் சேதம் ஏற்பட்டால், ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
Safety Norms – தொழில்நுட்பக் கோணம்:
ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை (IRC / RDSO) பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி,
மேம்பாலங்களில் அதிக சரிவு (Steep Gradient) தவிர்க்கப்பட வேண்டும்
இருசக்கர வாகனங்கள், முதியோர், மாணவர்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல வடிவமைப்பு சீரமைப்பு அவசியம்
மழைக்காலங்களில் வழுக்கல் தடுப்பு ஏற்பாடுகள், எச்சரிக்கை பலகைகள் கட்டாயம்
ஆனால் அம்மனாங்குப்பம் ரயில்வே பாலத்தில் இவ்விதிகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் சிரமம்
இந்த பாலத்தின் உயரம் காரணமாக,
இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன கட்டுப்பாட்டை இழக்கும் நிலை
அவசர மருத்துவ வாகனங்கள் தாமதம்
இரவு நேரங்களில் விபத்து அபாயம்
அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அமைச்சரிடம் மனு:
இந்த பிரச்சினை குறித்து, குடியாத்தம் நகருக்கு வருகை புரிந்த
மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்களை சந்தித்து,
ரயில்வே பாலத்தின் உயரத்தை குறைத்து, பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப மறுசீரமைக்க வேண்டும் எனக் கோரிய மனு வழங்கப்பட்டது.
அம்மனுவை மத்திய ரயில்வே அமைச்சரிடம் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை:
Railways Act மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் அடிப்படையில்,
உடனடி தொழில்நுட்ப ஆய்வு
விபத்து தடுப்பு நடவடிக்கைகள்
நிரந்தர தீர்வு
வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K. V. ராஜேந்திரன்
