தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் உயிரிழந்ததுடன், பலர் தீவிர காயமடைந்தனர்.
தென்காசி விபத்தில் பலியானவர்கள் விவரம்:
1. Vanaraj (36/25), 36-A, Vinayagar Temple Street, 4th Street, Tenkasi Puthukudi
2. Thenmozhi (55/25), W/o Venkatashwaran, Puliyamukku Street, Kadayanallur.
3. Malika (55/25), Puliyangudi.
4. Unknown Female — Aged about 30 years, wearing Pink Chudithar.
5. Unknown Female — Aged about 50 years, wearing Yellow and Red Saree.
6. Unknown female aged about 50 wearing green saree and blouse.
*கடையநல்லூர் உலகா பள்ளி ஆசிரியை தேன்மொழி விபத்தில் உயிரிழப்பு*
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமும்,
கடுமையான படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும்,
சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்க வேண்டும் என
முதலமைச்சர் உத்தரவிட்டதாக அமைச்சர கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தனியார் பேருந்துகள் வழக்கமாகவே மிகுந்த வேகத்தில் பயணம் செய்வது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துவரும் நிலையில், இந்த விபத்து மீண்டும் வேகக்கட்டுப்பாட்டு தேவையை உரத்துச் சொல்கிறது.
தென்காசி–கடையநல்லூர் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெரும் அபாயத்தில் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக லோக்கல் தனியார் பேருந்துகளுக்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியுள்ளது.
இந்த பெரும் விபத்து குறித்து தகவல் அறிந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்று, அனுமதிக்கப்பட்டுள்ள காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களின் சிகிச்சை நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தகவல்:
தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் – அமல் ராஜ்

