Sat. Dec 20th, 2025



நவம்பர் 24 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், குடியாத்தம் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் (MLA), குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராசன்,நகரமன்ற உறுப்பினர் எம். சுமதி மகாலிங்கம்,
செல்வ விநாயகர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் எஸ். எஸ். பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு பணியின் தொடக்கத்தை சிறப்பித்தனர்.

ஊர் பெரியவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கேவி ராஜேந்திரன்

 

By TN NEWS