Wed. Jan 14th, 2026

சீன வழியாக எவரெஸ்ட் ஏற தயாராகும் தூத்துக்குடி இளைஞர் வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி.

கள்ளக்குறிச்சி | தமிழ்நாடு டுடே

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் திரு. வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி, உலகின் உயரமான சிகரங்களை ஏறி இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.ஏற்கனவே அவர் உலகின் மூன்று கண்டங்களில் உள்ள உயரிய சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஏறியுள்ள முக்கிய சிகரங்கள்:

மவுண்ட் எல்ப்ரஸ் (Mount Elbrus) – ஐரோப்பாவின் மிக உயரமான சிகரம் (5,642 மீ.) மவுண்ட் அக்கோன்காகுவா (Mount Aconcagua) – தென் அமெரிக்காவின் மிக உயரமான சிகரம் (6,961 மீ.) மவுண்ட் கிலிமஞ்சாரோ (Mount Kilimanjaro) – ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் (5,895 மீ.) இந்த மூன்று மாபெரும் சிகரங்களையும் வெற்றிகரமாக ஏறி, “உலகின் ஏழு கண்டங்களின் மிக உயரமான சிகரங்களை வெல்வது” என்ற உயரிய இலக்கை நோக்கி அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

தேசிய அளவிலான மலையேற்றப் பயிற்சி

இச்சாதனையாளர், அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள NIMAS (National Institute of Mountaineering and Adventure Sports) நிறுவனத்தில் BMC (Basic Mountaineering Course) மலையேற்றப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.இந்த பயிற்சி, இந்தியாவில் மிக உயர்ந்த தரம் வாய்ந்த மலையேற்றப் பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சீன வழியாக எவரெஸ்ட் – புதிய முயற்சி, புதிய சாதனை

தமிழ்நாட்டில் இதுவரை 4 பேர் நேபாள் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஆனால், புதிய முயற்சியாக,

👉 வரும் ஏப்ரல் 2ஆம் தேதி
👉 சீனாவின் (Tibet) வழியாக
👉 புதிய மலையேற்றப் பாதையைத் தேர்ந்தெடுத்து

எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு வெங்கடசுப்பிரமணியன் நல்லசாமி தயாராகி வருகிறார். இந்த முயற்சியின் போது,“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”என்ற தமிழர் உலகளாவிய தத்துவத்தை இலச்சினையாகத் தாங்கி, புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார்.

🔹 இந்த சீன வழி எவரெஸ்ட் பாதையைத் தேர்ந்தெடுத்து, தமிழ்நாட்டிலிருந்து ஏற முயலும் முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற உள்ளார்.

இளைஞர்களுக்கான ஊக்கமாகும் சாதனை.

இந்த இளம் சாதனையாளர், இன்று நம்மை சந்தித்து தனது அனுபவங்கள், எதிர்கால இலக்கு மற்றும் தமிழக இளைஞர்கள் மலையேற்றம் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டிய அவசியம் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

செய்தி:
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி,
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS