‘தீராத சபை – முடிவெடுக்கும் அமைப்பு’ என்கிற நிலைக்கு தொழிலாளர் சட்டம் தள்ளப்படுகிறதா?
தமிழ்நாடு டுடே | சிறப்பு செய்தி
இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய வேலைச் சட்டங்கள் (New Labour Codes) தொழிலாளர் உரிமைகள், கூலி நிர்ணயம், வேலை பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் புதிய சவால்களை உருவாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் நல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூலி நிர்ணயம்: 60:40 விகிதம் – யாருக்கு பயன்?
புதிய சட்டத்தின் கீழ்,
அடிப்படை ஊதியம் (Wage)
பொருள் செலவு (Material Cost)
நிர்வாக செலவு (Admin Cost)
ஆகியவை இணைக்கப்பட்டு, 60:40 விகிதத்தில் கூலி நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால், தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான வருமானம் குறையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்டுமானம், உற்பத்தி, உட்கட்டமைப்பு (Infrastructure) துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.
Social Audit – பெயரளவிலான கண்காணிப்பா?
புதிய சட்டத்தில் Social Audit எனப்படும் சமூக தணிக்கை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், அது உண்மையான தொழிலாளர் நலத்தை பாதுகாக்குமா?அல்லது அரசு மற்றும் நிறுவனங்களுக்கான ஆவண நடவடிக்கையாக மட்டுமே மாறுமா?
என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Bottom-up Planning இல்லாத திட்டமிடல்:
தொழிலாளர்களின் அடிப்படை தேவைகள், நிலப்பரப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல்,
மேல்மட்டத் தீர்மானங்கள் (Top-down approach) மூலமே கொள்கைகள் வகுக்கப்படுவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இதனால், தொழிலாளர் பாதுகாப்பு,ஊதிய சமத்துவம்,சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் பலவீனமடையும் நிலை உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.
2024–25 நிதியாண்டு: எண்ணிக்கைகள் என்ன சொல்கின்றன?
2024–25 நிதியாண்டுக்கான தரவுகளின்படி, சுமார் 76% தொழிலாளர்கள் 46 துறைகளில் 4,457 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் புதிய வேலைச் சட்டங்களின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்களில் 125 ரூபாய் தினக்கூலி, LDL அடிப்படை ஊதியம்,100% உரிமை பாதுகாப்பு உள்ளதா என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை.
“தீராத சபை” ஆக மாறும் அபாயம்:
புதிய சட்டங்கள்,
தொழிலாளருக்கு தீர்வு தரும் அமைப்பாக இல்லாமல்
முடிவுகள் எடுக்கப்படாத, பொறுப்பற்ற அமைப்பாக
மாறும் அபாயம் உள்ளதாக தொழிலாளர் அமைப்புகள் எச்சரிக்கின்றன.
தீர்வு என்ன?
நிபுணர்கள் கூறுவது:
Normative Allocations (நியாயமான ஒதுக்கீடுகள்) Expenditure Ceilings (செலவு வரம்புகள்) Demand-driven Planning (தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமிடல்) ஆகியவை அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, புதிய வேலைச் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு நியாயம் செய்யும் சட்டமாக மாறும் என தெரிவிக்கின்றனர்.
இறுதியாக:
புதிய வேலைச் சட்டங்கள்,தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக மாறுமா? அல்லது
நிறுவன நலனுக்கான சட்டமாக மட்டுமே செயல்படுமா?
என்பது, வரும் காலங்களில் அரசின் செயல்பாடுகளிலேயே தெளிவாகும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
✍️ தமிழ்நாடு டுடே – சிறப்பு செய்தி
ஷேக் முகைதீன்.
