Wed. Aug 20th, 2025

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள்.

முக்கிய அம்சங்கள்:
1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:
– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே  முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள் வழங்கப்படுகின்றன.
– இந்த சேவைகள் மற்ற மையங்களில் அல்லது ஆன்லைனில் பெற இயலாது.
– சென்னை முழுவதிலும் இந்த சேவைக்கு ஒரே மையம் – அடுத்ததாக இத்தகைய மையம் மதுரையில் உள்ளது.


2. முக்கிய சிக்கல்கள் மற்றும் அனுபவங்கள்:
– காலை 9.30 முதல் 10.00 மணிவரை மட்டும் டோக்கன் வழங்கப்படுகின்றது. 500 பேர் வரை மட்டுமே டோக்கன் பெற முடிகிறது.
– இரண்டு மணி நேரம் வரை டோக்கனுக்காக மக்கள் கடும் வெயிலில், போக்குவரத்து மிகுந்த சாலையோரங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
– முதியோர், பெண்கள், குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர் இங்கு வருகிறார்கள்.
– ஊழியர்களின் நடத்தை மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது. மக்கள் குறைகளை தெரிவித்தாலும், கேளாமல் பதில் அளிக்கிறார்கள்.
– சிறிய காரணங்களை கூறி பலரை திருப்பி அனுப்புகிறார்கள். குறைந்தது மூன்று நான்கு முறைகள் வரச் செய்கிறார்கள்.
– கழிப்பறை, சுகாதாரம், காற்றோட்ட வசதிகள் இல்லை. மையம் அமைந்துள்ள இடம் குறுகியதும், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட அலுவலகங்களும் உள்ளதால் இட நெருக்கடிகள் உள்ளன.
– மேலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர் கூட முறையாக விளக்கம் அளிக்க மறுப்பது பொதுமக்களை அவமானப்படுத்தும் சூழலாக கருதப்படுகிறது.


3. அரசிடம் வலியுறுத்தல்:
– இதுபோன்ற முக்கியமான பொதுச் சேவைகள் தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்படும் போது, அரசும் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
– ஊழியர்கள் திறன் பெற்றவர்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
– சேவை தரம் மற்றும் வசதிகளை அரசு தினமும் கண்காணிக்க வேண்டும்.
– மக்கள் மத்தியில் எளிதாக சேவையை வழங்கும் வகையில் சீரமைப்பு தேவை.


முடிவுரை:
“இந்த ஆதார் மையத்தில் நான் நேரில் பார்த்த மற்றும் அனுபவித்த நிலை மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது. இந்த அனுபவம் மூலமாக, மக்களின் ஒருமித்த குரலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், இது போன்ற சேவை மையங்கள் அனைத்து மக்களுக்கும் நலமளிக்கும் வகையில் இயங்கும் என நம்புகிறேன்.”

இணை ஆசிரியர் வலைப்பதிவு.

தமிழ்நாடு டுடே

 

By TN NEWS