Thu. Aug 21st, 2025

குடியாத்தத்தில் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம்:

பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை பிச்சனூர் பகுதியில் உள்ள சாலம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது.

இந்த முகாமில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.

நிகழ்வில் முக்கிய பிரமுகர்களாக:

நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன்

வட்டாட்சியர் கி. பழனி

நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன்

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம்

நகர மன்ற உறுப்பினர்கள்,வருவாய்த்துறை, நகராட்சி துறை உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் 1, 2 மற்றும் 6ம் வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், இலவச வீட்டு மனை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல அரசுத் திட்டங்களுக்கான மனுக்களை அளித்தனர்.

இம்முகாம் பொதுமக்களின் தேவைகளை நேரில் கேட்டு பதிலளிக்கும் ஒரு பயனுள்ள ஏற்பாடாக அமைந்தது என்பது பொதுமக்களின் கருத்து.

– கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் செய்தியாளர்

By TN NEWS