*D.R.M திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி,நன்றி🙏🙏*
வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டது…
வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களை நிறுத்த தனி இடவசதி இல்லாமல் இருந்தது
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் பார்க்கிங் இடங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.அவை *சக்கர நாற்காலி சின்னத்துடன்* குறிக்கப்பட்டு இருக்க வேண்டும்..
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு போதுமான இடவசதியுடன் பார்க்கிங் இடங்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளனவா என்று ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
*அடையாளம்:*
அந்த இடங்கள் சக்கர நாற்காலி சின்னத்துடன் குறிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கானது என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
*சட்டப்பூர்வ உரிமை:*
அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அல்லது உரிமத் தகடு வைத்திருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு அனுமதி இல்லை:
மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்கள் இந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை.
ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும், மேலும் பல வசதிகள் வழங்கப்படுகின்றன.
*சக்கர நாற்காலிகள்:*
ரயில் நிலையங்களில் இலவச சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மாற்றுத்திறனாளி வாகனங்கள் வள்ளியூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பற்ற இடத்தில் ஆங்காங்கே விட்டு செல்லும் நிலை இருந்தது. தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் சண்முக சுந்தரம் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு DRM திருவனந்தபுரம் அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தார் அதனை பரிசீலித்த ரயில்வேதுறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வாகன நிறுத்தும் இடத்தை அமைத்து கொடுத்துள்ளார். ரயில்வே நிர்வாகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இப்படிக்கு
தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம்.
வள்ளியூர் – திருநெல்வேலி மாவட்டம்.