Fri. Feb 13th, 2026

பிப்ரவரி 12

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள 23 குடும்பங்களுக்கு ஆதரவாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் நகர்மன்ற தலைவர் சௌந்தரராஜன் மற்றும் தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

அப்போது பொதுமக்கள் தெரிவித்ததாவது:
“நாங்கள் ஆதிதிராவிடர் பகுதியாகக் கருதப்படும் இந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிணைந்து வசித்து வருகிறோம். தற்போது ஒருவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பட்டா வழங்கப்படாத இந்த இடத்தில் பூங்கா அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க முன்வர வேண்டும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே உள்ளது.

ஆதிதிராவிடர் மக்களான பெரியார் நகர வாசிகள், திராவிட மாடல் அரசு தங்களுக்கு நியாயமான தீர்வையும் நல்ல முடிவையும் வழங்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” என தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS