பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை.
கன்னியாகுமரி | ஜன.31
📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி, அவர்களை மீண்டும் பள்ளிக் கல்விக்குள் இணைத்துள்ளது மாவட்ட காவல்துறையின் மனிதநேய முயற்சி.
👮 ‘நிமிர்’ – சமூக மாற்றத்திற்கான காவல் முனைவு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட ‘நிமிர் – The Rising Team’, குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், போக்சோ குற்றங்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கவும் தொடங்கப்பட்டது.
🔶 விரிவடைந்த மக்கள் நல பணிகள்
தற்போது நிமிர் குழு,
குழந்தை திருமணத் தடுப்பு,
தற்கொலை முயற்சிகள் தடுப்பு,
பள்ளி இடைநிற்றல் தடுப்பு,
ஆதரவற்ற முதியோர் பாதுகாப்பு,
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றத் தடுப்பு
போன்ற பல்வேறு சமூகப் பொறுப்புப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
🎒 ஒரே நாளில் 8 மாணவர்கள் மீண்டும் பள்ளியில்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 8 மாணவர்களை நிமிர் குழுவினர் நேரில் அணுகி, பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மீண்டும் சேர்த்தனர்.
🌱 சமூக மாற்றத்தின் நம்பிக்கை:
“கல்வியே சமூக மாற்றத்தின் அடித்தளம்” என்பதை நிரூபிக்கும் இந்த முயற்சி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்