Sun. Mar 22nd, 2026

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி

சின்னசேலம் | ஜன.31

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு, ரயில் பயணத்தின் போது டிக்கெட் எடுப்பது, டிக்கெட் பரிசோதனை, ரயிலில் பாதுகாப்பாக ஏறுவது, சரியான நேரத்தில் இறங்குவது, ரயில் நிலைய தூய்மை பேணுதல் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, மாணவர்கள் சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து தலைவாசல் வரை ரயிலில் பயணம் செய்து, பயண ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தும் வகையில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன் மூலம் குழந்தைகளிடையே ரயில் பயண விழிப்புணர்வு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தலைவாசலைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா தனியார் பள்ளி சார்பில், பள்ளி தாளாளர் பெரியநாயகி அவர்கள் ஏற்பாடு செய்து, மாணவர்களே முன்னின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிநடத்திச் சென்றார். இந்நிகழ்ச்சி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்,
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS