கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது.
நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வெறும் 8 அடி உயர மரக்குச்சியில் தேசியக் கொடியை ஏற்றியிருப்பது, அரசியலமைப்புச் சிந்தனைகளுக்கும், தேசிய மரியாதைக்கும் நேர்ந்த அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு குடியரசு தின நிகழ்வை இவ்வளவு அலட்சியமாக நடத்தச் செய்தது யார்?
உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பு எங்கே?
மேற்பார்வை அதிகாரிகளின் கவனம் எங்கு போயிற்று?
தேசியக் கொடி என்பது அலங்காரப் பொருள் அல்ல; அது தேசத்தின் மரியாதை. அந்த மரியாதை இவ்வாறு களையப்பட்டதற்கு உடனடி நடவடிக்கை அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அனைத்து ஊராட்சிகளிலும் முறையான கொடிக்கம்பம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது வெறும் தவறு அல்ல…?
இது வெட்கக்கேடு.
V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தலைமை செய்தியாளர் & மக்கள் தொடர்பு அதிகாரி