Fri. Feb 27th, 2026

விழுப்புரம் – ஜனவரி 29

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 08.08.2017 அன்று பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை மடம் ரோட்டில், மாணிக்கம் என்பவரது நிலத்தில், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சடகோபன் (48), த/பெ பாலகிருஷ்ணன் என்பவரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்றதாக, விக்கிரவாண்டி தாலுக்கா ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மதி என்கிற மதியழகன் (40) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், குற்றவாளி மதி @ மதியழகன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில், நேற்று இரவு பெரியதச்சூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. நாகராஜ், காவல் உதவி ஆய்வாளர் திரு. லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர்.

அதில் தலைமறைவாக இருந்த மதி @ மதியழகன் (40) கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கே. மாரி
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்

By TN NEWS