Sat. Jan 10th, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல் துறையில் அதிகாலை 5 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பொதுக் கப்பல் கட்டணம் ரூ.100 என்றும், விரைவுச் சேவைக்கான கட்டணம் ரூ.300 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு சேவைகளுக்கும் பெரும் கூட்டம் காணப்படுகிறது.

இந்த நெரிசலைத் தவிர்க்க, ஆன்லைன் முன்பதிவு செய்வது பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
பூம்புகார் கப்பல் சேவைக்கான முன்பதிவை
👉 www.psckfs.tn.gov.in
என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது.

விவேகானந்தர் பாறை அருகே கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், காலை நேரத்தில், வானிலை சாதகமாக இருந்தால், சுற்றுலாவை முழுமையாக ரசிக்க முடியும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு டுடே
ஷாலு
செய்தியாளர், கேரளா

By TN NEWS