காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு.
தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கல்வி – நல்ல மனிதனை உருவாக்கும் கருவி:
பள்ளி தலைமையாசிரியர் திரு. எஸ். பாண்டித்துரை பேசுகையில்,
“கல்வி என்பது மதிப்பெண்கள் மட்டுமல்ல; ஒழுக்கமும் சட்ட விழிப்புணர்வும் மாணவர்களை சிறந்த குடிமக்களாக மாற்றும். சட்டங்களை அறிந்த மாணவர்கள் தவறுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்,” எனக் கூறி, ஒழுக்கமே மாணவர்களின் முதல் சொத்து என்பதை வலியுறுத்தினார்.
சமூக நீதி & மனித உரிமைகள்:
காவல் ஆய்வாளர் (SI) திரு. ரவி மற்றும்
சிறப்பு காவல் ஆய்வாளர் (SSI) திரு. சிவசம்பு பேசுகையில்,
பிறப்பு, ஜாதி, மதம், இனம் என்ற அடிப்படையில் யாரையும் தாழ்வாகக் கருதக் கூடாது.
சமூக நீதி என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு
அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
மனித உரிமை மீறல்களைப் பார்த்தால் மௌனமாக இருக்கக் கூடாது என்று விளக்கினர்.
நவீன கால சவால்கள் – காவல்துறை எச்சரிக்கை
தலைமை காவலர்கள் திரு. சதீஷ், திரு. சுசீந்திரன் மாணவர்களிடம்,
சைபர் குற்றங்கள்:
சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடக் கூடாது.
வங்கி விவரங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்..
போதைப்பொருள் ஒழிப்பு:
“ஒருமுறை பழகும் போதை, முழு வாழ்க்கையையும் சிதைக்கும்”
போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இலக்கில் மாணவர்கள் பங்கெடுக்க வேண்டும்
சாலை பாதுகாப்பு:
உரிமம் இன்றி வாகனம் ஓட்டக் கூடாது
இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் கட்டாயம்
என்று வலியுறுத்தினர்.
பொது ஒழுக்கம் & ஆரோக்கியம்:
மாணவர்கள் கைபேசி பயன்பாட்டைக் குறைத்து, உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் பொது இடங்களில் கண்ணியமான நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு – சட்டமும் காவல்துறையும் உங்களுடன்.
பெண் தலைமை காவலர்கள்:
திருமதி. திவ்யா, திருமதி. பாண்டியம்மாள், திருமதி. தங்கேஸ்வரி
ஆகியோர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விரிவாக உரையாற்றினர்.
🔹 Safe & Unsafe Touch:
“உங்கள் உடல் – உங்கள் உரிமை”
அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக ‘வேண்டாம்’ (NO) என்று சொல்ல வேண்டும்
மறைக்காமல் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.
🔹 குழந்தை திருமணத் தடுப்பு:
18 வயதுக்கு முன் திருமணம் செய்தல் கடுமையான குற்றம்
கல்வி, ஆரோக்கியம், எதிர்காலத்தை இது பாதிக்கும்
தகவல் வழங்குவது சமூகக் கடமை.
🔹 தற்காப்பு & மன உறுதி:
மன ரீதியான வலிமை
அவசர நேரங்களில் தற்காத்துக் கொள்ளும் அடிப்படை முறைகள் – செய்முறை விளக்கம்
🔹 உதவி எண்கள்:
1098 – குழந்தைகள் உதவி மையம்
181 – பெண்கள் உதவி மையம்
காவலன் SOS App – அவசர கால காவல் உதவி
🔹 பெண்களுக்கான சைபர் பாதுகாப்பு:
சமூக வலைதளங்களில் எச்சரிக்கை அவசியம்
இணையத் தொந்தரவுகள் மீது கடும் சட்ட நடவடிக்கை
பெண் காவலர்களின் உரை, மாணவ மாணவிகளிடையே தன்னம்பிக்கை, சட்ட பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தியது.
📞 முக்கிய உதவி எண்கள்:
காவல்துறை: 100
குழந்தைகள் உதவி மையம்: 1098
சைபர் குற்ற புகார்: 1930
✍️ செய்தி தொடர்பாளர்
அன்புபிரகாஷ் முருகேசன்
சின்னமனூர்.

