Sat. Jan 10th, 2026

செங்கம் நகராட்சியில்,
நூறுநாள் வேலைத் திட்ட நிதி குறைப்பு, பெயர் மாற்றத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,
நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு வழங்கி வந்த நிதியை 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைத்ததையும்,
மேலும், மகாத்மா காந்தி பெயரை நீக்கி வடமொழியில் பெயர் சூட்டும் முயற்சியையும் கண்டித்து வலியுறுத்தப்பட்டது.

தலைவர்கள் பங்கேற்பு:

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

செங்கம் சட்டமன்ற உறுப்பினர் – மு.பெ. கிரி

ஒன்றிய செயலாளர்கள் – மனோகரன், ஏழுமலை, செந்தில்குமார்

செங்கம் நகர செயலாளர் – அன்பழகன்

முன்னாள் மாவட்ட கவுன்சிலர் – செந்தில்குமார்

ஆகியோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் நடவடிக்கைகள் ஏழை, தொழிலாளி மக்களை பாதிப்பதாக கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

நூறுநாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கியத் திட்டமாக இருப்பதால், அதற்கான நிதி குறைப்பையும் பெயர் மாற்ற முயற்சியையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

✍️ க. பிரபு (எ) ஏழுமலை
புகைப்பட ஆசிரியர் மற்றும் மாவட்ட நிருபர்

By TN NEWS