நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த செல்வ கருணாநிதி, முத்து செல்வன் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை:
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முத்து செல்வன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை:
இந்த சம்பவம் தொடர்பாக, களக்காடு போலீசார்
கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
✍️ செய்தியாளர்
வி. மணிகண்டன் வேலாயுதன்
