Tue. Dec 16th, 2025

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன.

முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள், அவர் சென்ற 24-வது நாளில் முற்றிலும் உடைந்தன. அந்த இடத்தில் மீண்டும் அபாயகரமான அளவில் பெரிய குண்டுக்குழி உருவானது.

அந்தக் குண்டுக்குழியில், மணிகண்டன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இது தற்செயலான விபத்து அல்ல – திட்டமிட்ட அலட்சியத்தின் நேரடி விளைவு.

இதனை தொடர்ந்து,

“முதல்வர் வருகைக்காக செய்த சாலை சீரமைப்பு வெறும் நாடகம்; அந்த சாலை உடனடியாக நிரந்தரமாகச் சீரமைக்கப்பட வேண்டும்”
என்று செய்திகள், சமூக ஊடகங்கள் வாயிலாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.


சாலை சீரமைப்பதற்குப் பதிலாக, அந்த இடத்தில் பேரிகாடு மட்டும் வைத்து காட்டிக் கொடுத்த பாதுகாப்பு ஏற்பாடு மக்கள் உயிரோடு விளையாடும் செயல்.

“பேரிகாடு வைப்பது போதாது – சாலையை செப்பனிடுங்கள்”
என்று வைக்கப்பட்ட கோரிக்கையும் அலட்சியப்படுத்தப்பட்டது.



இந்த நிலையில், நேற்று இரவு அந்த பேரிகாட்டின் மீது லாரி மோதியதில் பேரிகாடு துண்டு துண்டாக சேதமடைந்தது.
லாரி என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதுவே கார், வேன், பேருந்து போன்ற பயணிகள் வாகனமாக இருந்திருந்தால் பெரிய படுகொலை நிகழ்ந்திருக்கும்.


⚖️ சட்ட ரீதியான கோரிக்கை (LEGAL DEMAND):

1. மணிகண்டன் உயிரிழப்புக்கு காரணமான
👉 சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,
👉 உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள்,
👉 ஒப்பந்ததாரர்கள் மீதும்
IPC 304(A) – அலட்சியத்தால் உயிரிழப்பு பிரிவின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


2. இந்த சாலையை தற்காலிகமாக “பஞ்சர் ஒட்டிய” ஒப்பந்த நிறுவனத்தின் மீது:
👉 மோசடி,
👉 மக்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்திய குற்றம்,
👉 அரசு நிதி முறைகேடு
ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்த வேண்டும்.


3. விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்திற்கு:
✅ முழுமையான அரசு இழப்பீடு,
✅ குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி
வழங்கப்பட வேண்டும்.


4. சம்பவ இடத்தில் உள்ள முழு சாலையும்:
✅ நிரந்தர தர சாலை,
✅ விஞ்ஞான முறையிலான வடிகால் வசதி,
✅ எதிர்கால விபத்துகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள்
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்கள் உயிரை அலட்சியப்படுத்தும் நிர்வாகத்தின் மீது சட்டம் தன் கடும் நடவடிக்கையை காட்ட வேண்டும் – இல்லையெனில் இது தனி மரணம் அல்ல, தொடர் படுகொலையாக மாறும்!

அமல்ராஜ்
தென்காசி மாவட்டம், தலைமை செய்தியாளர்


By TN NEWS