டிசம்பர் 2 — குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பெண்கள் பயணிகளுக்கான மூன்று புதிய பேருந்துகள் இன்று தொடங்கி இயக்கத்தில் விடப்பட்டன.
புதிய பேருந்துகள் வழித்தடம் 5B – மேல்பட்டி வழியாகவும் பச்சைக்குப்பம் வழியாகவும் இயங்கவுள்ளது.
புதிய பேருந்துகளை கொடியசைத்து இயக்கத்தில் விடும் நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து, பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேலும் கலந்து கொண்டவர்கள்:
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன்
ஒன்றிய கழகச் செயலாளர் கல்லூர் ரவி
நகர அவைத் தலைவர் கா. கோ. நெடுஞ்செழியன்
நகர மன்ற உறுப்பினர் மனோஜ்
தலைமை கழக பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன்
நகரத் தொண்டர் அணி துணை அமைப்பாளர் டி. ஜெயக்குமார்
வர்த்தக அணி முருகேசன்
கிளை மேலாளர், நடத்துனர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்
