Wed. Dec 17th, 2025

குடியாத்தம் அருகே வழிப்பாதை பிரச்சனையில் அண்ணன்–தம்பிகள் இடையே மோதல் இருவரும் கத்திக்குத்தில் காயம்.

டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம்

குடியாத்தம் அருகே உள்ள புட்டவாரிப்பள்ளி – மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில், நத்தம் சர்வே எண் 212–ல் உள்ள வழிப்பாதை பிரச்சனை காரணமாக அண்ணன்–தம்பிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரும் கத்திக்குத்தில் காயமடைந்தனர்.

டிசம்பர் 1 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில், மாணிக்கத்தின் மகன்களான சின்னதுரை மற்றும் சின்னராஜ் ஆகியோருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியன் (த.பெ. சின்னராஜ்) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு தீவிரமடைந்து, இரு தரப்பினரும் கத்திக்குத்தில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதாக தகவல்.

அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருவரையும் மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இ சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

குடியாத்தம் தாலுகா செய்திகள்
கேவி. ராஜேந்திரன்

By TN NEWS