Wed. Dec 17th, 2025



ஐந்து அருவியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் – சுற்றுலா பயணிகள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி – குற்றாலம்:
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவி மற்றும் புலி அருவி ஆகிய சுற்றுலா இடங்களில் நீதிமன்றம் ஏற்கனவே சோப்பு, சேம்பு போன்ற ரசாயன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்துள்ளது. இவை நீர் மாசுபடுவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் முக்கிய காரணமாக இருப்பதால் இந்தத் தடை அமலில் உள்ளது.

ஆனாலும், சில சுற்றுலா பயணிகள் இத்தடையை மீறி சோப்பு, சேம்பு, ஷாம்பு போன்ற பொருட்களை அருவியில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நீர்தன்மை பாதிக்கப்படுவதோடு, மற்ற பயணிகள் தரிசன அனுபவத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது.

அறிவிப்பு பலகைகள் அவசியம் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை:

இந்த நிலைமை தொடர்வதைத் தடுப்பதற்காக, அருவிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று தெளிவான அறிவிப்பு பலகைகள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்,

ஆண்கள் குளிக்கும் பகுதி, பெண்கள் குளிக்கும் பகுதி
என்று தனித்தனியாக குறிக்கும் அறிவிப்பு பலகைகளையும் அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


பெரும்பாலான பயணிகள் “பலகைகள் இல்லாததால் விதிமுறைகள் தெரியாமல் இருப்பதாக” கூறுவதால், இது மிகவும் அவசியமான நடவடிக்கை எனவும் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி: தமிழ்நாடு டுடே – தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்
TNT அமல் ராஜ்

By TN NEWS