Wed. Dec 17th, 2025

சென்னை – மாவட்ட செய்திகள்:
இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day) நினைவாக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகம் வெளியிட்டு வழங்கப்பட்டது.

நாட்டின் அடிப்படை சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள், கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள், உடனிருந்து, அரசியலமைப்பு புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

திருமதி ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள், “அரசியலமைப்பு என்பது ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய உயரிய ஆவணம். இளைஞர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் உள்ள உரிமைகள், கடமைகள், ஜனநாயக அடிப்படைகளை அறிந்து செயல்பட வேண்டும்” என்று விழிப்புணர்வு செய்தார்.

செய்தி: தமிழ்நாடு டுடே – சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி

By TN NEWS