ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார்.
இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து வாடிக்கையாளர் கேட்டபோது, “மகளிர் சுய உதவிக் குழுவில் பெற்ற கடனை நீங்கள் இன்னும் செலுத்தவில்லை; கடன் தொகையை கட்டினால் தான் பணத்தை எடுக்கலாம்” என வாய் வழியாக கூறியதாக ராஜேஸ்வரி தெரிவித்தார்.
இதையடுத்து, 2025 செப்டம்பர் 24 ஆம் தேதி, வங்கி மேலாளரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கோரி பதிவு தபால் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், இதுவரை எந்தவித எழுத்துப்பூர்வ பதிலும் வழங்கப்படவில்லை. இதனால், வங்கி மேலாளர் மீது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், வங்கி மேலாளர் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவிகளுடன் இணைந்து, வாடிக்கையாளர்களின் பணத்தையும், வங்கியின் கடன் வழங்கும் செயல்முறையையும் முறைகேடாக பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த செயல்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கும், இந்திய ரிசர்வ் வங்கி விதிகளுக்கும் எதிரானவையாகும் என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வங்கியின் பல வாடிக்கையாளர்கள் குறைந்த கல்வி அறிவுடையவர்கள், விவசாய கூலி தொழிலாளர்கள், மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபடும் பாமர மக்கள் என்பதனால், இவர்களை குறிவைத்து முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இதனை அரசும், வங்கி கட்டுப்பாட்டு அமைப்புகளும் கவனத்தில் கொண்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்படி இந்தியன் கிளை வங்கியில்
இது இரண்டாவது குற்றச்சாட்டு செய்தி.
இணைப்பு ஆவணங்கள்:
1️⃣ பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் புகைப்படம் (ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை)
2️⃣ எழுமாத்தூர் இந்தியன் வங்கி
புகைப்படம்.
தர்மராஜ்
மாவட்ட நிருபர்,
ஈரோடு.