இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் விரைவாகப் பின்தொடர்ந்து காரை விரட்டி மானாமதுரை அருகே பிடித்தனர்.
அவர்களின் காரில் 5 ஆடுகளுடன், வெவ்வேறு பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சொகுசு கார்களில் ஆடுகள் கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
📰 மாவட்ட செய்தியாளர்: செந்தில்குமார்
🎥 ஒளிப்பதிவாளர்: இராமச்சந்திரன்
