பிப்ரவரி 12
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு
மாவட்ட கவுன்சில் செயலாளர் வி. கலைநேசன்,
மாவட்ட துணைத் தலைவர் சி. சரவணன்,
பீடி தொழிற்சங்க செயலாளர் ஜி.எஸ். மூர்த்தி,
எஸ்.பி. சக்கரவர்த்தி, கே. சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர் எஸ். சிலம்பரசன்,
கட்டுமான தொழிற்சங்க செயலாளர் ஞானசேகர்,
விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.சி. பிரேம் குமார்,
ஜோதி கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில்
நகர்மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், பழனியப்பன், ஆலியார், அத்தாவுல்லா, இ. கிருஷ்ணவேணி, ஜலந்தர், துரை செல்வம், முல்லை வாசன், மதியழகன் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர்.
பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்ற போராட்டத்தில், 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் போது போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

