Sun. Jan 11th, 2026

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…!

குடியாத்தம் | ஜனவரி 9

இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு,மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மை இலக்காகக் கொண்டு குடியாத்தத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை,
கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம்,போலீஸ்க் கிளப்,வட்டார போக்குவரத்து அலுவலகம்
மற்றும் குடியாத்தம் காவல்துறை இணைந்து நடத்தின.

புதிய பேருந்து நிலையம் அருகே தொடக்கம்.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்த பேரணிக்கு,
கல்லூரி முதல்வர் தண்டபாணி தலைமையில்,
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் பாலசுப்பிரமணியம்
தலைவர் சுந்தரவத்தனம், செயலாளர் கே.எம். ராஜேந்திரன்
பொருளாளர் முத்துக்குமார், அதிகாரிகள் பங்கேற்பு

நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் வரவேற்றார்.

பேரணியை,

குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) இருதயராஜ்,

போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் முகேஷ் குமார்,

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன்,

குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்
ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


பேரணி சென்ற வழிகள்:

புதிய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி,
காமராஜர் பாலம் – நேதாஜி சவுக் வழியாகச் சென்று
முடிவடைந்தது.

மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு:

பேராசிரியர்கள் மணிகண்டன், ஜெயக்குமார்,

கல்லூரி சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், உறுப்பினர் சுந்தரமூர்த்தி,பேராசிரியர்கள் பாலமுருகன், பாலசுப்பிரமணியம், பிரேம்குமார், நாகராஜ்
உள்ளிட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள்
ஏராளமானோர் கலந்து கொண்டு,


“ஹெல்மெட் – ஒரு பழக்கம் அல்ல; உயிர்காக்கும் பாதுகாப்பு” என்ற செய்தியை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றனர்.

🔎 விளக்கப் பெட்டி | ஹெல்மெட் சட்டம் – மோட்டார் வாகனச் சட்டம் (MV Act):

மோட்டார் வாகனச் சட்டம் 1988 – பிரிவு 129
➤ இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்பவரும்
ISI சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் அணிவது கட்டாயம்

பிரிவு 194(D)
➤ ஹெல்மெட் அணியாமல் ஓட்டினால்
ரூ.1,000 அபராதம்
➤ 3 மாதங்களுக்கு லைசென்ஸ் இடைநீக்கம் செய்யப்படும்

மாணவர்கள் & இளைஞர்களுக்கான முக்கிய எச்சரிக்கை:
➤ விபத்துகளில் உயிரிழப்புகளில்
தலைக்காயமே முக்கிய காரணம்
➤ ஹெல்மெட் அணிவது
சட்டக் கட்டாயம் மட்டுமல்ல – உயிர் பாதுகாப்பு

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS