Mon. Jul 21st, 2025



திருக்கோவிலூர், மார்ச் 25:

பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர், மற்றும் இதற்கான நடவடிக்கைகளை முன்வைத்த திமுக துணை பொது செயலாளர், தமிழக வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் Dr. பொன். கெளதமசிகாமணி ஆகியோருக்கு திருக்கோவிலூர் திமுக கிழக்கு ஒன்றியத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சி நிகழ்வில் திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்பு

இன்று 25.03.2025 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு, திருக்கோவிலூர் திமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், அத்தண்டமருதூர் அணைக்கட்டு வாயில் எதிரில், பெருந்திரளாக திரண்டு திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைப்பெருந்தலைவர் மற்றும் மாவட்ட திட்டமிடல் குழு உறுப்பினர், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர், மூத்த வழக்கறிஞர் மு.தங்கம் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்:

ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் – பாலமுருகன்

ஒன்றிய அவைத்தலைவர் – தீனதயாளன்

ஒன்றிய பொருளாளர் – தண்டபாணி

துணை செயலாளர் – ஆவிக்கொளப்பாக்கம் ஏழுமலை

பொதுக்குழு உறுப்பினர் – பக்தவச்சலம்

வழக்கறிஞர் – நிஜாம்

ஒன்றிய கவுன்சிலர் – ஜெயப்பிரகலாதன்

மாவட்ட பிரதிநிதி – முதலூர் முருகன்

ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் – வெங்கடாசலம்

கிளை செயலாளர்கள் – ஆவியூர் கோவிந்தசாமி, ஆவிக்கொளப்பாக்கம் சுப்ரமணி, அத்தண்டமருதூர் பிரபு, பிடாரம்பட்டி பத்மநாபன், ஆராமேடு அன்பழகன் மற்றும் பலர்.


நிகழ்வில் திரளான திமுக கட்சி நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் பங்கேற்று அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

— கள்ளக்குறிச்சி முதன்மை செய்தியாளர் V. ஜெய்சங்கர்