திருப்பூர் மார்ச் 25,,
*போயம்பாளையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.*
*அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கவும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை.*
*இதுகுறித்து 42 முறை புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.*
*இது தொடர்பாக தொடர்ச்சியாக ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக புகாரளித்திருந்தார்.*
*அதன் பேரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக வைக்கப்பட்டிருந்த அறவிப்பு பலகையை மர்ம நபர்கள் அகற்றியது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையாளர் , வருவாய் கோட்டாச்சியர், வடக்கு வட்டாச்சியர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக புகாரளித்த ஈ.பி.அ.சரவணனுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.*
அதில் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிபாளையம் கிராமம், மாநகராட்சிக்குட்பட்ட 2-வது மண்டலம், 8 வது வார்டு, பி.என்.ரோடு, போயம்பாளையம், பழனிச்சாமி நகர் பகுதியிலுள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 கோடி மதிப்புள்ள (SF.NO – 295A/1) நிலத்தை ஆக்கிரமிப்பு கண்டறிந்து வருவாய்த்துறையினரால் 2 முறை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாகவும், மேற்படி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதை மர்ம நபர்கள் அகற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கக் கோரியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முழு இடத்தையும் மீட்டெடுக்க உரிய தீர்வு காணக் கோரியும் திரு.ஈ.பி.அ.சரவணன் என்பவர் மனு அளித்துள்ளார்.
மேற்காணும் மனு நகல் உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
மேற்படி மனுவின் மீது உரிய சட்டவிதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்து இவ்வலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர செய்தியாளர் – சரவணக்குமார்
