Tue. Jul 22nd, 2025

மும்பையில் பயங்கர தீவிபத்து – தாராவி பி.எம்.சி காலனியில் 50-70 கேஸ் சிலிண்டர் வெடிப்பு!

மும்பை:

மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பி.எம்.சி காலனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பலரை அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த விபத்தில் 50 முதல் 70 வரை கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை!

தீ பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு பல தற்காப்புத் துறைகள் மற்றும்  தீயணைப்பு வாகனங்கள் விரைந்தும், தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு தப்பிச் செல்வதற்காக திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் குறித்து முழு தகவல் இல்லை

இந்த தீ விபத்தால் பல வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. பல உயிர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லையெனினும், தீயணைப்பு வீரர்கள், மீட்புப் படையினர் மற்றும் மருத்துவ சேவைகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Dr.சேக்முகைதீன் – இணை ஆசிரியர்

By TN NEWS