Fri. Mar 6th, 2026

நாகர்கோவில், மார்ச் 6:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:

வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

நில அளவை பணிகள் மேற்கொள்ளும் போது மற்றும் மணல் கொள்ளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதிகாரிகள் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

பிற துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல வருவாய்துறையினருக்கும் பணி பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும்.

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அரசு ஊழியர்கள் கூட தங்களது அடிப்படை உரிமைகளை பெற போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

செய்தியாளர்:
ஷாலு
தமிழ்நாடு டுடே – கன்னியாகுமரி மாவட்டம்

By TN NEWS