செஞ்சி, மார்ச் 6:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து கலசங்கள் மேளதாளம் முழங்க யாகசாலைக்கு எடுத்துவரப்பட்டு முதற்கால வேள்வி நடத்தப்பட்டது.
வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோபூஜை நடைபெற்றதுடன் இரண்டாம் கால பூஜை தொடங்கியது. பின்னர் கலசங்களில் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தம் நாடிகள் வழியாக இறை திருமேனிக்கு சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேள்வி நிறைவாகுதி, திருமுறை விண்ணப்பம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் திருக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு திருக்குட நன்னீராட்டு, மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒளிப்பதிவாளர்:
கே. மாரி
விழுப்புரம் மாவட்டம்