Sat. Jan 10th, 2026

குடியாத்தம் | டிசம்பர் 27 :

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த S.I.R. (Special Intensive Revision) நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில்
நகரக் கழக செயலாளர் ஜே.கே.என். பழனி

தி.மு.க. சார்பில்
நகர செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன்,
ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி

தே.மு.தி.க. சார்பில்
நகர செயலாளர் செல்வகுமார்

இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில்
மாவட்ட தலைவர் வீராங்கன்

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்
நிர்வாகிகள் துரை செல்வம், சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

5,346 வாக்காளர் படிவங்களில் குறைபாடு:

கூட்டத்தில், குடியாத்தம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5,346 S.I.R. வாக்காளர் படிவங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனை சரி செய்ய,

ஜாதி சான்று,

இருப்பிட சான்று,

பட்டா – சிட்டா,

உள்ளிட்ட மொத்தம் 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து,

குறைபாடுகளை பூர்த்தி செய்து,

BLO (Booth Level Officer) இடம் வழங்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் சரிபார்ப்பு பணிகளில் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.


கே.வி. ராஜேந்திரன்
தாலுகா செய்தியாளர்
குடியாத்தம்

By TN NEWS