Sat. Jan 10th, 2026

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண்.

அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.
கேள்வி மேல் கேள்வி.

அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.
வயது – 24.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி.

நிருபர்கள் கேட்ட கேள்வி:

“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இந்தப் பெரிய பதவி?
உங்கள் குடும்பம் செல்வாக்கு மிகுந்ததா?”

சிறிது நேர மௌனம்.

பின்னர் ஸ்ருதி அமைதியாகச் சொன்னார்:

“இல்லை…
என் குடும்பம் மிக எளிமையானது.
நான் ஒரு சாதாரண கிராமத்துப் பெண்.”

அடுத்த கேள்வி:

“உங்கள் அப்பா – அம்மா பற்றி சொல்லுங்களேன்?”

மீண்டும் மௌனம்.

பின்னர் ஸ்ருதி மெதுவாகச் சொன்னார்:

“ஒரு நிமிடம்…
என்னோடு வெளியே வர முடியுமா?”

நிருபர்கள் கேமராவுடன் பின்தொடர்ந்தனர்.

“என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்…”

“நீதிபதியா?”
“வக்கீலா?”
இல்லை… இல்லை…

கோர்ட் வளாகத்தில் ஒரு மர நிழல்.
அங்கே ஒரு டீக்கடை.
“நாம் எல்லாரும் ஒரு கப் டீ குடிக்கலாமா?” – ஸ்ருதி.

டீ குடித்ததும் நிருபர்கள் கேட்டனர்:
“மேடம்… உங்கள் அப்பா…?”

ஸ்ருதி புன்னகையுடன் திரும்பி அழைத்தார்:

“அப்பா… இங்கே வாங்க!”

அதிர்ச்சியில் உறைந்தனர் அனைவரும்.

அந்த டீ விற்பவரின் அருகில் நின்று ஸ்ருதி சொன்னார்:

“இவர்தான் என் அப்பா.
பல ஆண்டுகளாக இந்த கோர்ட்டுக்கு எதிரே டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடும் உழைப்பினால்தான்
இன்று இதே கோர்ட்டுக்குள்
நான் நீதிபதியாக நிற்கிறேன்.”

பின்னர் புன்னகையுடன்:

“என் அப்பா டீ வழங்க வேண்டும்.
நானோ தீர்ப்பு வழங்க வேண்டும்.

நான் வரட்டுமா?”

கம்பீரமாக நீதிமன்றத்துக்குள் நடந்து சென்றார் நீதிபதி ஸ்ருதி.

மர நிழலில் நின்ற தந்தை –
ஆனந்தக் கண்ணீருடன்.

📝 செய்தி சொல்லும் வரி:

“பதவி பாரம்பரியத்தில் இல்லை…
உழைப்பின் வியர்வையில் உள்ளது!”

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் – தலைமை செய்தியாளர்




 

By TN NEWS