சென்னை / டிசம்பர் 18:
ரயில் புறப்படுவதற்கு முன் டிக்கெட் முன்பதிவு (Reservation Chart) நிலையை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதுவரை, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை 10 மணி நேரத்திற்கு முன்பே தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணை விவரம்:
காலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை,
👉 முந்தைய நாள் இரவு 8.00 மணிக்கு தயாரிக்கப்படும்.
இதர நேரங்களில் புறப்படும் ரயில்களுக்கு,
👉 அவை புறப்படும் நேரத்திற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்.
இந்த மாற்றத்தின் மூலம், கடைசி நேரங்களில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் நிலையை பயணிகள் முன்கூட்டியே அறிந்து கொண்டு, தங்களின் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளின் நேர மேலாண்மை மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
செய்தியாளர்:
ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி
தமிழ்நாடு டுடே

