Fri. Dec 19th, 2025


கள்ளக்குறிச்சி, டிசம்பர் 17:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வரும் இரண்டாம் வகுப்பு மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்தது. சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, மாணவியின் காலில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், “நெடுமானூர் பள்ளி வளாகம் முழுவதும் புதர்கள் அதிகமாக வளர்ந்து விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகள் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

செய்தியாளர்:
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS