Wed. Dec 17th, 2025



தென்காசி / நெல்லை :

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் தாக்கம், இன்று மற்றும் நாளை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று காரணமாக,
👉 இன்று இரவு முதல்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🌧️ கனமழை எச்சரிக்கை

இன்று இரவு
🔴 இராமநாதபுரம் கடலோர பகுதிகள்
🔴 தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகள்
👉 கனமழை பெய்யும்

நெல்லை – தென்காசி மாவட்டம்
👉 மாவட்டம் முழுவதும் பரவலான மிதமான மழை

மிக கனமழை வாய்ப்பு உள்ள இடங்கள்
🔴 தூத்துக்குடி
🔴 காயல்பட்டினம்
🔴 திருச்செந்தூர்
🔴 இராமேஷ்வரம் (கடலோர பகுதிகள்)


⛰️ மலை கிராமங்களுக்கு Red Alert நிலை

நெல்லை மாவட்டத்தில் உள்ள
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி
போன்ற மலை கிராமங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் – மணிமுத்தாறு அணை நிரம்புமா?

ஈரப்பதம் நிறைந்த கிழக்கு திசை காற்று காரணமாக,
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால்,
👉 பாபநாசம் – மணிமுத்தாறு அணைகள்
இந்த 2 நாட்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டால்,
👉 அணைகள் நிரம்பும் வாய்ப்பு அதிகம்.

இல்லையெனில்,
👉 இந்த ஆண்டு அணைகள் நிரம்பாமல் போகும் அபாயம் உள்ளது.

⚠️ காரணம்:
டிசம்பர் 18க்கு பிறகு வடகிழக்கு பருவமழை படிப்படியாக விடைபெற உள்ளது.

#Tenkasi Weatherman

அமல்ராஜ்
தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS