




கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:
“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி**
தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம்
தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் கடும் அவதியில் தவித்து வருகின்றனர்.
மக்கள் தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் குறை தெரிவித்தும், ஒரு வாரமாக எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை.
ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் மீது தீவிர குற்றச்சாட்டுகள்:
அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டுகள்:
கிராம செயலாளர் மகாலிங்கம் அலுவலகத்துக்கு முறையாக வருவதில்லை
பஞ்சாயத்து அலுவலகம் பெரும்பாலான நாட்களில் திறந்து வைக்கப்படுவதில்லை
கிராமத்தில் ஒரு அடிப்படை வசதியும் சேர்க்கப்படவில்லை
மக்கள் தேவைகள் கூறினால் “100 நாள் வேலை கொடுக்க மாட்டேன்” என மிரட்டப்படுகின்றது
தெருவிளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய் போன்றவை மேம்படுத்தப்படவில்லை
தமிழக அரசின் கலைஞர் கனவு இல்ல திட்டமும் இன்னும் கனவாகவே உள்ளது
குறைகள் தீராததால் மக்களின் போராட்டம் செயலாளரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எங்களின் அத்தியாவசிய தேவைகளை உடனே பூர்த்தி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், கிராம மக்கள் கூறும் குறைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி
