Tue. Dec 16th, 2025

 


டிசம்பர் 2 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 0 முதல் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ மற்றும் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் அவர்கள் துவக்கி வைத்தார்.
நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன்,
ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர்.

முகாமில் வழங்கப்பட்ட சேவைகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று வழங்குதல்

NiD & UDID பதிவு மற்றும் புதுப்பித்தல்

இலவச ரயில் / பேருந்து பயண சலுகைக்கான பதிவு

உதவி உபகரணங்கள் (Assistive Devices) பெற பதிவு

அரசு உதவித்தொகைக்கு விண்ணப்ப பதிவு

குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆலோசனை

மனநல மருத்துவ ஆலோசனை

எலும்பு, மூட்டு, ENT மருத்துவ பரிசோதனை

கண் மருத்துவ பரிசோதனை

அண்ணப்பிளவு உள்ளிட்ட அறுவை சிகிச்சை தொடர்பான ஆய்வு மற்றும் ஆலோசனை


முகாமில் மாற்றுத்திறனாளி அலுவலர்கள், பல்வேறு துறைகளின் மருத்துவர்கள் கலந்து கொண்டு சேவைகள் வழங்கினர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு முகாமின் பயன்களை பெற்றனர்.

குடியாத்தம் K.V.ராஜேந்திரன்

By TN NEWS