Thu. Nov 20th, 2025


🔴 நான்கு பெண் பணியாளர்கள் அம்பத்தூரில் உண்ணாவிரதம்;
🔴 112வது நாளாக எழும்பூரில் பேரணி!
“பணி நீக்கம் திரும்பப் பெறும் வரை தொடர்ந்த போராட்டம்”! உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி.

சென்னை மாநகராட்சியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 1953 தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக் கூறி 112வது நாளாக இன்று எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற அனுமதியுடன், நான்கு பெண் தூய்மை பணியாளர்கள் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணிகளை மீண்டும் பழைய முறைப்படி வழங்க வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.


விரிவான செய்தி:

சென்னை மாவட்ட செய்தி — 20.11.2025

சென்னை :
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பிரச்சனை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
தூய்மை பணிகளை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களுக்கே வழங்க வேண்டும்; 1953 பணியாளர்களின் பணி நீக்கம் ரத்து செய்யப்பட வேண்டும்; திமுக தேர்தல் வாக்குறுதி 153-ன் படி நிரந்தர பணி வழங்க வேண்டும் என்று கோரி தூய்மை பணியாளர்கள் 112வது நாளாக இன்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 1 முதல் ராம்கி நிறுவனத்தின் மூலம் பணிகள் வழங்கப்படுவது தவறு என்று கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் ஆகஸ்ட் 13 அன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், போராட்ட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நான்கு தூய்மை பணியாளர்களுக்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கியது.
அதன்படி நான்கு பெண் தூய்மை தொழிலாளர்கள் அம்பத்தூரில் நான்கு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக இன்று 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உழைப்போர் உரிமை இயக்க தலைவர் கு. பாரதி பேச்சு:

“15–20 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களை குப்பை போல் தள்ளி விட்டனர்.”

“1953 பேரை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தது அநீதி.”

“ராம்கி நிறுவனத்திடம் வேலை செய்ய சொல்லுவது சமூக நீதிக்கு விரோதம்.”

“எந்த அளவுக்கும் போராட்டம் தொடரும்; அரசு உடனே தீர்வு கொண்டு வர வேண்டும்.”

“உண்ணாவிரதத்தில் இருக்கும் பணியாளர்களின் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் திமுக அரசு முழுப் பொறுப்பு.”


இவரது கருத்துக்கு பணியாளர்கள் ஒற்றுமையுடன் ஆதரவு தெரிவித்தனர்.

Tamil Nadu Today
சென்னை மாவட்ட செய்தியாளர் – எம். யாசர் அலி

By TN NEWS