உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை.
சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில்,
இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மாடுகளை மோதும் விபத்துகள்,
பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பயப்படும்படி மாடுகள் துரத்தும் சம்பவங்கள்,
பிஸியான ஜங்க்ஷன்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலைகள்
அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மாநகராட்சியின் எச்சரிக்கை:
தெருக்களில் மாடுகளை சுதந்திரமாக விடும் உரிமையாளர்கள் மீது,
➤ கடுமையான அபராதம்,
➤ மாடுகளை பறிமுதல் செய்தல்,
➤ சட்டநடவடிக்கை
எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம்
பெருநகர Chennaiயில் சாலை பாதுகாப்பு மற்றும் நகர ஒழுங்கு காக்கப்பட வேண்டிய முக்கிய நேரத்தில்,
“மாடுகளின் காரணமாக நகர போக்குவரத்து மற்றும் பொதுப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதற்கு இடமில்லை” என மாநகராட்சி உறுதியளித்துள்ளது.
மாடுகளை சாலைகளில் விட்டுவிடும் பழக்கத்தை உடனடியாக நிறுத்தி, அவற்றை பாதுகாப்பான இடங்களில் கட்டுபாட்டுடன் பராமரிக்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
