ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா பங்கஜம், I.A.S., அவர்கள் நேரடியாக பங்கேற்று வருகின்றார்.
மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,
வாக்காளர் பெயர் சேர்த்தல்
திருத்தம்
நீக்கல்
முகவரி மாற்றம்
போன்ற விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை மக்களுக்கு விளக்கி வருகிறார்.
நேற்று, பூதலூர் தாலுக்கா பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் SIR செயல்முறை குறித்து விரிவாக விளக்கமளித்தார். வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரிபார்த்து, தேவையான திருத்தங்களை உடனடியாகச் செய்ய வேண்டுமெனவும் ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்,
தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்,
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்