ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா?
தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்த முயற்சிகளும், தமிழக மக்களின் மனங்களில் ஆழ்ந்த வேதனையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு வாரியங்களிடம் விளக்கம் கோரியிருப்பது, இந்தப் பிரச்சினையை மீண்டும் ஒரு அபாயகரமான கட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை என்பது ஒரு சாதாரண தொழிற்சாலை அல்ல.
அது தூத்துக்குடி மக்களின் உடல்நலம், குடிநீர் ஆதாரம், நிலம், கடல், வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதித்த ஒரு வரலாற்றுச் சோகத்தின் நினைவுச்சின்னம்.
அந்த ஆலையை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் ஜனநாயக முறையில் போராடியபோது, அரசின் துப்பாக்கிச் சூட்டில் நமது இரத்தச் சொந்தங்கள் உயிரிழந்த துயரம், இன்னும் தமிழ்நாட்டின் மனச்சாட்சியில் அழியாத காயமாகவே உள்ளது.
இந்த நிலையில், எந்தக் காரணத்திற்காகவும் —
“பசுமைத் தாமிர ஆலை” என்ற பெயரில் இருந்தாலும்,
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்யக் குழு அமைப்பதோ, மறைமுக நடவடிக்கைகளைத் தொடங்குவதோ, தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது.
தமிழ்நாடு அரசு நிறுவன நலனுக்காக இயங்காமல்,
மக்களின் உயிர் பாதுகாப்புக்காக இயங்குவதே அதன் முதன்மையான அரசியல் கடமை.
அதனால்,
“பூட்டப்பட்ட ஆலை” என்ற நிலை மட்டும் போதுமானதல்ல.
எதிர்காலத்தில் எந்த அரசும் மீண்டும் அந்த ஆலையைத் திறக்க முடியாத வகையில்,அங்கு உள்ள கட்டிடங்கள், இயந்திரங்கள், உற்பத்தி அமைப்புகள் அனைத்தையும் சட்டபூர்வமாக முற்றிலும் அகற்றி,அந்த நிலத்தை பொதுநலப் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமும், நீதியின் கோரிக்கையும் ஆகும்.
போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவுகளை மதிப்பதும், மக்களின் போராட்ட உணர்வை காப்பதும்,
தமிழ்நாடு அரசின் தவிர்க்க முடியாத வரலாற்றுப் பொறுப்பாகும்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான எந்த முயற்சிக்கும் இடமளிக்காமல், அதை நிரந்தரமாக அகற்றும் சட்டபூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள, தமிழ்நாடு அரசையும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசு அமைப்புகளையும்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்